Wednesday, November 26, 2008

தேநீர் மருந்துபோல இருந்து புற்றுநோய் செல்களை மனித உடலில் முற்றிலும் அழிப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது !

October 30, 2008


காபி- தேநீர் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் மருந்துபோல் தினமும் பால் கலக்காமல் ஒரு கப் தேநீர் அருந்தி வருவது நல்லது. இது உயிரைக் காப்பாற்றும். மருத்துவச் செலவையும் முழுமையாகக் குறைக்கும்.

புற்றநோயையும் இதயநோய்களையும் தேநீர் நன்கு தடுக்கும்.

உலகம் முழுவதிலிருந்து பிரதிநிதிகள் தேநீர் அருந்துவதால் ஏற்படும் நலம் பயக்கும் நன்மைகளை அறிய வாஷிங்டன் டி.சி.யில் 1999ல் கூடினார்க்ள.

இரண்டாவது சர்வதேச விஞ்ஞானிகள் கருத்தரங்கு இங்கே நடைபெற்றது.

அதிகமாகப் பலன்களை காய்கறிகள் சாப்பிடுவதைவிட ஒரு கப் தேநீரில் இருந்து கிடைக்கும் சக்தி மாபெரும் நோய்த்தடுப்புச் சக்தியாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

காய்கறி சாலட் ஒரு கப்பே பழச்சாறு ஒரு கப்போ சாப்பிட முடியாத நிலையில் ஒரு கப் தேநீர் சாப்பிடுங்கள்.

பிரிட்டனில் தேநீர் அருந்துபவர்கள் அதிகம். இதைப் பார்த்து அமெரிக்கர்கள் தேநீர்ப் பிரச்சாரம் தாங்க முடியாமல் அதற்கு மாறினார்கள். காபியிலிருந்து தேநீருக்கு மாறியதும் செலவு மட்டுமல்லை புற்றுநோய் இதயநோய் அபாயம் பிரிட்டனில் உள்ளது போலவே குறைந்து போய்விட்டது.

பீஜிங் நகரில் உள்ள சீன மருந்து கழகம் ‘தேநீர் மருந்துபோல இருந்து புற்றுநோய் செல்களை மனித உடலில் முற்றிலும் அழிப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. எலிக்கும் சுண்டெலிக்கும் புற்றுநோய் செல்களை செலுத்தினார்கள். தேநீரையும் செலுத்தினார்கள். புற்றுநோயை வளரவிடாமல் தேநீர் தடுத்துவிட்டது. பெருங்குடலிலும் நுரையீரலிலும் தேநீர் அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது.

‘உலகம் முழுவதும் மாபெரும் நோயாக இதயநோய் முதலிடத்தை வகிக்கிறது. தேநீர் அதிகம் பருகும் பழக்கத்தால் வாழ்க்கை முறை மாறும். இதய நோய்களையும் பச்சை மற்றும் கறுப்பு தேநீர் முற்றிலும் தடுத்து நிறுத்துவதால் நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள் உடனுக்குடன் பிழைப்பார்கள். ஆயிரக்கணக்கான இதய நோயாளிகளின் வாழ்நாளும் அதிகரிக்கும். கோடிக்கணக்கான டாலர்களும் சேமிக்கப்படும்’ என்கிறார் இந்தக் கருத்தரங்களின் தலைவரும் அமெரிக்க சுகாதாரக் கழகத்தின் மூத்த உறுப்பினருமான டாக்டரான ஜான்வெய்ஸ்பர்கர்.

எனவே சீனர்களைப் போல கறுப்புத் தேநீரோ அல்லது இந்தியர்களைப் போல பால் கலந்த தேநீரோ ஜப்பானியர்களைப் போல கிரீன் டீயோ தினமும் ஒரு கோப்பையேனும் அருந்துங்கள். மருந்துபோல இதுவரை பழக்கமில்லாவிட்டாலும் இனியாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றி!alaikal E-news

Saturday, September 27, 2008

www.vywa.blogspot.com

நமது சங்கத்தின் புதிய இணையதளம் www.vywa.blogspot.com புதிய முகவரியில் இயங்குகிறது.நண்பர்கள் அனைவரும் தவறாமல் பார்த்து கருத்தினை தெரிவிக்கவும் .நன்றி .

Tuesday, September 16, 2008

vywa.blogspot

நமது வாணியர் இளைஞர் சங்க இணையதளம் www. vywa.blogspot.com என்ற புதிய முகவரியில் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .

Saturday, July 12, 2008

R K Sஅவர்களின் நினைவுகள்

வணக்கம்.நம் வாணியர் இளைஞர் நலச் சங்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று நம்முடைய சமூகத்தின் வளர்ச்சிககாக பாடுபட்ட தலைவர்களை பெருமைபடுத்தி தற்கால தலைமுறையினருக்கு விளங்கவைத்தல்.அந்த வகையில் திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின்,தபால் தலை வெளியிடுவதில் முன் முயற்சி எடுத்து வருகிறது.ஆர்.கே.எஸ்.மிகச்சிறந்த பொருளாதார மாமேதை.ஆங்கிலேயர்களாலேயே பாராட்டு பெற்றவர்.
காந்தியடிகள்,பெரியார்,தாகூர் போன்றோருடன் நெருங்கிப்பழகியவர்.சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்.ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, போராடியவர்.சென்னையில் தமிழ் சங்கம் அமைக்க திரு.அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து வெற்றி கண்டார்.
ஆனந்த விகடனிலும் கட்டுரை எழுதியுள்ளார்.இந்தியாவில் பல தலைவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளன.சிறு வயது முதலே நாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின்,தபால் தலை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தின் பல பிரிவுகளிலும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.அவர்கள் R K S -ன் வாரிசுகளைப் பற்றிய விவரங்களை கேட்டுள்ளார்கள்.அவர் கோவையில் பிறந்து வளர்ந்த இடம் உள்ளது. எனவே அவரை பற்றிய விவரங்களை சேகரித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
R K Sஅவர்களின் நினைவுகள் சில.








Thursday, July 03, 2008

வாணியர்.காம் இணையதளத்துக்கு வாழ்த்துக்கள்.

vaniyar.com (வாணியர்.காம்) என்ற புதிய இணையதளம் துவக்கப்படுள்ளது.வாணியர் பேரவை தலைவர் திரு.ஆர். பன்னீர் செல்வம் அவர்களுக்கும்,பொதுச்செயலாளர் திரு.S.ராஜேந்திரன் அவர்களுக்கும் நம் வாணியர் இளைஞர் நலச் சங்கத்தின்(VYWA-( vywa.blogspot )வின்)வாழ்த்துக்கள்!








Monday, June 02, 2008

சாதனை மாணவர்கள்

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்

1.சென்னை கொண்டித்தோப்பு -S.மகேஷ் குமார் (448/500)
2.சென்னை திருவல்லிக்கேணி- D.வசந்த்குமார் (374/500)


+2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
1.சென்னை ஆவடி-K.ப்ரியா(1108/1200)
2.சென்னை மயிலாப்பூர்-S.K.யோகேஷ்வரன்(997/1200)
3.மந்தைவெளி, S.அஸ்வினி


புதுக்கோட்டை மாவட்டம் திரு.K.முரளீஸ்வரன் BE.,அவர்கள்
BE(Computer science and engneering) பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.மேலும் அவர் பள்ளி,கல்லூரியில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்ற அவருக்கு நமது VYWA வின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, June 01, 2008

வாணியர்செட்டியார் சமூக மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

வாணியர் செட்டியார் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அதிக மதிப்பெண் பெற்றவர்களும்,வேறு தனித்திறமைகள் கொண்டவர்களும் தங்களுடைய விவரங்களை நமது சங்கத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

முகவரி-P.தர்மலிங்கம்,செயலாளர்,
வாணியர் இளைஞர் நலச் சங்கம்
374,அவ்வை சண்முகம் சாலை,
திருவல்லிக்கேணி,சென்னை-600005
e-mail:vaniyar.welfare@yahoo.co.in

Saturday, May 31, 2008

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!

அரசு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நம்முடைய VYWA-வின் சார்பாக வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் நம் மாணவர்கள் பல சாதனைகள்படைத்து பெற்றோருக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்!