வணக்கம்.நம் வாணியர் இளைஞர் நலச் சங்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று நம்முடைய சமூகத்தின் வளர்ச்சிககாக பாடுபட்ட தலைவர்களை பெருமைபடுத்தி தற்கால தலைமுறையினருக்கு விளங்கவைத்தல்.அந்த வகையில் திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின்,தபால் தலை வெளியிடுவதில் முன் முயற்சி எடுத்து வருகிறது.ஆர்.கே.எஸ்.மிகச்சிறந்த பொருளாதார மாமேதை.ஆங்கிலேயர்களாலேயே பாராட்டு பெற்றவர்.
ஆனந்த விகடனிலும் கட்டுரை எழுதியுள்ளார்.இந்தியாவில் பல தலைவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளன.சிறு வயது முதலே நாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின்,தபால் தலை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தின் பல பிரிவுகளிலும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.அவர்கள் R K S -ன் வாரிசுகளைப் பற்றிய விவரங்களை கேட்டுள்ளார்கள்.அவர் கோவையில் பிறந்து வளர்ந்த இடம் உள்ளது. எனவே அவரை பற்றிய விவரங்களை சேகரித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
R K Sஅவர்களின் நினைவுகள் சில.