12/07/2008 எண்ணம் சொல் செயலால் எவருக்கும்,எப்போதும், நன்மையே விளைவிக்க, நாட்டமாய் இரு
13/07/2008 தூய்மையாம் விளைவுதரும் சொற்கள் அனைத்துமே வாய்மையாம் அவைவாழ்வின் வளம் காத்துச் சிறப்பளிக்கும்.
14/07/2008 எண்ணு,சொல், செய் எல்லோர்க்கும் நன்மை தர, எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.
---யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
15/07/2008
மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. --- சுவாமி விவேகானந்தர்.
16/07/2008 ```````````` அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டுவந்தே தீரும் --- சுவாமி விவேகானந்தர்.
17/07/2008 ```````````` சோதிக்க நினைப்பவன் கடவுள் சாதிக்க நினைப்பவன் மனிதன்.
18/07/2008 ```````````` அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படையில் ஆற்றும் கடமையெல்லாம் அன்பின் செயலாகும். ---யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
19/07/2008 ^^^^^^^^^ கட்சிகளால் அரசாட்சி கையாளப்படும் போக்கு பட்சிகளை வேடுவர்கள் பரமரிக்கும் முறை போன்றே ---யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
20/07/2008 ~~~~~~~~~ தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.இவை அனைத்திற்கும் மேலாக,அன்பு வேண்டும். --- சுவாமி விவேகானந்தர்.
22/07/2008 ``````````` எந்தச்செயலில் ஈடுபட்டாலும் உயர்வான செயலிலே ஈடுபட வேண்டும்.ஒருவேளை அந்தச்செயல் தோல்வி அடைந்தாலும்,அந்தத்தோல்வியை யாரும் இழிவாக நினைக்கமாட்டர்கள். -----திருவள்ளுவர்.
23/07/2008 ''''''''''''''''''''''''''''' ஒரு சிறுவன் ஒரு கைத்தொழிலைக் கற்கத்தொடங்குங்காலத்தில் > தனது கருவிகளைச் சரியாகப் பிடிக்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது. > ஆனால், அவன் திரும்பத் திரும்ப நீண்டகாலம் அப்பியாசம் செய்த பின்னர் அவற்றை > மிகச்சுலபமாகவும் சாமர்த்தியமாகவும் உபயோகிக்கிறான். அதுபோல, முதலில் > அடைவதற்கு முடியாததாகத் தோற்றும் ஒரு மனோபாவம் விடாமுயற்சியாலும் > அப்பியாசத்தாலும் கடைசியில் அடையப்பட்டு முயற்சியின்றி இயற்கையாக நிகழ்கின்ற > ஒரு நிலைமை ஆகின்றது. -----Dr.M.S.உதயமூர்த்தி.
24/07/2008 ``````````` கீழ்கண்ட மூன்றில் எந்த வகையான வேலை முறை அதிகமாகக் கையாளப்பட்டு வருகிறதோ, அதைப் பொறுத்தே ஒருவருடைய வாழ்வின் வெற்றி இருக்கும். 1.கடமைக்காகச் செய்துமுடிக்கும் வேலை கடனுக்காகச் செய்த வேலையாகவே இருக்கும். 2.கட்டாயத்துக்காகச் செய்கிற வேலை சிறப்படையாது. 3மனம் படிந்து, முழு ஈடுபாட்டோடு செய்கிற வேலை பரிபூரணமாய் இருப்பதோடு, கலைப்பண்பின் மெருகும் பெற்றுப் பொலிவுறும். ஆகவே வெற்றி வாழ்வை விரும்புகிற ஒருவன், அவன் செய்யும் காரியம் அனைத்திலும் கலைப்பண்பின் மெருகை ஏற்றி, அது பூரணமாகப் பொலிவுறும்படிச் செய்யவே எண்ணுவான். அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு, எந்தக் காரியத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்ய அவன் பழகிக்கொள்ள வேண்டும். ---------ஜேம்ஸ் ஆலன்.
25/07/2008 *********** இரவோடிரவாக ஒரு விதை,மரமான கதையை நாம் கேட்பதில்லை.அதுபோலத்தான் ஆசைப்படும் ஒரு மனிதன் இரவோடிரவாக,ஒரு விஞ்ஞானியாகவோ,ஒரு கலைஞனாகவோ,ஒரு தலைவனாகவோ மாறுவதில்லை. ஒருவன் ஒரு பாறையைப் பிளக்க அதன் மீது சம்மட்டி கொண்டு அடி மீது அடியாக அடித்துக்கொண்டிருந்தான்.நூறாவது அடியில் பாறை பிளந்தது.பாறை உடைப்பவன் சொன்னான்,"நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது"என்று.ஆனால் நமக்குத் தெரியும் அதற்குமுன் அடித்த 99 அடிகளும் அந்தப் பாறை பிளப்பதற்குக் காரணமாக இருந்தன என்பது. உழப்பின் பலன் பல சமயம் உடனடியாகத் தெரியாது.அதற்காக நாம் உழைக்க தயக்கம் காட்டக்கூடாது. -----Dr.M.S.உதயமூர்த்தி.
26/07/2008 ``````````` இதுவரை எங்கிருந்தோம், எப்படி இருந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல லட்சியம்.நாளை எதிர்காலத்தில் எங்கே போக விரும்புகிறோம் என்பதைப் பொறுத்ததே,லட்சியம் -----Dr.M.S.உதயமூர்த்தி.
27/07/2008 ************ ஒருவருக்குச் சாதனை செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தால்,அதற்கான ஒரு காலம் வந்தே தீரும்.அந்தக்காலத்தில் அதனை பயன்படுத்தி செய்யவேண்டிய சாதனைகளைச் செய்தால் வெற்றி உறுதியாகும். -----திருவள்ளுவர்.
28/07/2008 ^^^^^^^^^ பலரும் கூடி இருக்கும்போது,யாருக்கும் பயன் இல்லாத பேச்சுகளைப் பேசுவது தீமையைத் தருமே தவிர நன்மையைத் தராது. -----திருவள்ளுவர்.