Wednesday, November 26, 2008

தேநீர் மருந்துபோல இருந்து புற்றுநோய் செல்களை மனித உடலில் முற்றிலும் அழிப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது !

October 30, 2008


காபி- தேநீர் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் மருந்துபோல் தினமும் பால் கலக்காமல் ஒரு கப் தேநீர் அருந்தி வருவது நல்லது. இது உயிரைக் காப்பாற்றும். மருத்துவச் செலவையும் முழுமையாகக் குறைக்கும்.

புற்றநோயையும் இதயநோய்களையும் தேநீர் நன்கு தடுக்கும்.

உலகம் முழுவதிலிருந்து பிரதிநிதிகள் தேநீர் அருந்துவதால் ஏற்படும் நலம் பயக்கும் நன்மைகளை அறிய வாஷிங்டன் டி.சி.யில் 1999ல் கூடினார்க்ள.

இரண்டாவது சர்வதேச விஞ்ஞானிகள் கருத்தரங்கு இங்கே நடைபெற்றது.

அதிகமாகப் பலன்களை காய்கறிகள் சாப்பிடுவதைவிட ஒரு கப் தேநீரில் இருந்து கிடைக்கும் சக்தி மாபெரும் நோய்த்தடுப்புச் சக்தியாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

காய்கறி சாலட் ஒரு கப்பே பழச்சாறு ஒரு கப்போ சாப்பிட முடியாத நிலையில் ஒரு கப் தேநீர் சாப்பிடுங்கள்.

பிரிட்டனில் தேநீர் அருந்துபவர்கள் அதிகம். இதைப் பார்த்து அமெரிக்கர்கள் தேநீர்ப் பிரச்சாரம் தாங்க முடியாமல் அதற்கு மாறினார்கள். காபியிலிருந்து தேநீருக்கு மாறியதும் செலவு மட்டுமல்லை புற்றுநோய் இதயநோய் அபாயம் பிரிட்டனில் உள்ளது போலவே குறைந்து போய்விட்டது.

பீஜிங் நகரில் உள்ள சீன மருந்து கழகம் ‘தேநீர் மருந்துபோல இருந்து புற்றுநோய் செல்களை மனித உடலில் முற்றிலும் அழிப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. எலிக்கும் சுண்டெலிக்கும் புற்றுநோய் செல்களை செலுத்தினார்கள். தேநீரையும் செலுத்தினார்கள். புற்றுநோயை வளரவிடாமல் தேநீர் தடுத்துவிட்டது. பெருங்குடலிலும் நுரையீரலிலும் தேநீர் அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது.

‘உலகம் முழுவதும் மாபெரும் நோயாக இதயநோய் முதலிடத்தை வகிக்கிறது. தேநீர் அதிகம் பருகும் பழக்கத்தால் வாழ்க்கை முறை மாறும். இதய நோய்களையும் பச்சை மற்றும் கறுப்பு தேநீர் முற்றிலும் தடுத்து நிறுத்துவதால் நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள் உடனுக்குடன் பிழைப்பார்கள். ஆயிரக்கணக்கான இதய நோயாளிகளின் வாழ்நாளும் அதிகரிக்கும். கோடிக்கணக்கான டாலர்களும் சேமிக்கப்படும்’ என்கிறார் இந்தக் கருத்தரங்களின் தலைவரும் அமெரிக்க சுகாதாரக் கழகத்தின் மூத்த உறுப்பினருமான டாக்டரான ஜான்வெய்ஸ்பர்கர்.

எனவே சீனர்களைப் போல கறுப்புத் தேநீரோ அல்லது இந்தியர்களைப் போல பால் கலந்த தேநீரோ ஜப்பானியர்களைப் போல கிரீன் டீயோ தினமும் ஒரு கோப்பையேனும் அருந்துங்கள். மருந்துபோல இதுவரை பழக்கமில்லாவிட்டாலும் இனியாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றி!alaikal E-news